காதல் சுகமானது

விரல் தீண்டும்
வீணையானேன் நான்-
நீ தீண்டும் போது....!

காட்டு மூங்கில்
குழலானேன் நான்-
உன் சுவாசம் என்னைத்தீண்டும்போது...!

பால் வண்ணம் கொண்ட
மதியானேன் நான்-
உன் பார்வை பட்ட நொடியினிலே...!

கண்கள் சந்திப்பில்
காதல் பிறந்ததடி பெண்ணே...!

உன் நிழல் தீண்டா
நிமிடந்தன்னில்
நொருங்கிப் போனதென் இதயம்...!

உன் விழி தீண்டா
நொடிப்பொழுதில்
விலகிப்போனதென் உயிர்...
ஓரப்பார்வையினால்
இதமாய் கொழுத்தி விட்டாய்
இதயக்கனலை..
இதுவும் சுகம்தானே காதலில்....!

நீ அருகில் இருந்தால் -
சித்திரையும் ஐப்பசியாய்
அடைமழை என்னுள்ளே....
நீ விலகிச்சென்றாலோ-
நித்திரையும் போகுமடி எனக்கு.....!

எழுதியவர் : Renu (5-Jul-20, 7:30 am)
சேர்த்தது : renu
பார்வை : 200

மேலே