மனிதத்துடன் வாழ்ந்திடுக

--------------------------------------------
காலத்தின் வேகத்தை
முதுமையின் விளிம்பை
வாழ்வின் முதிர்ச்சியை
இயம்பிடும் இயல்பாக .....

மேனியின் சுருக்கங்கள்
மேதினியின் மாற்றங்கள்
மரணிக்கும் நினைவுகள்
தடுமாறும் செயல்கள்
ஏக்கமிகு எண்ணங்கள்
துணைதேடும் விழிகள் !
கரைகடக்கும் துடிப்புடன்
அலைபாயும் நெஞ்சம் !

கணக்கிடும் பாவங்களை
கழுவநினைக்கும் மனம் !
புரிந்தக் குற்றங்களால்
உறங்கமுடியா இரவுகள் !
சாதிக்காத ஆதங்கத்தால்
சாமவேளை வேதனைகள் !

இத்தனையும் நமக்கெதற்கு
அத்தனையும் நிகழாதிருக்க
மண்ணாகிப் போவதற்குள்
மனிதத்துடன் வாழ்ந்திடுக
புனிதரென்று புகழப்படுக
நல்லவரென பெயரெடுத்து
நானிலமே போற்றப்படுக !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Jul-20, 9:31 pm)
பார்வை : 396

மேலே