புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 19---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௧௯

181. உரிமையை விட்டுக் கொடுக்காதே
கடமையை விட்டு விலகாதே
தவறினால் உன் இடத்திற்கு வேறொருத்தர் வந்திடுவார்.

182. கொடுக்க வேண்டியதைச் சரியான நேரத்தில் கொடுத்துவிடு
இல்லை என்றால் துன்பங்கள் உருவாகும்.

183. திட்டம் இல்லாத செயல்கள்
திடீரென்று திசைமாறச் செல்லக்கூடும்.

184. தன்னால் மற்றவருக்குத் துன்பம் ஏற்பட்டால்
அவரைப் போலத் தானும் துடி துடிப்பார்
அன்பு நிறைந்த உள்ளம் கொண்டவர்கள்.

185. நீ சிரிப்பதற்கு இன்னொருத்தரை அழ வைக்காதே
அந்தப் பாவம் உன்னை அழ வைக்காமல் விடாது.

186. பணத்தைச் சம்பாதிப்பதற்காகப் படிக்கின்ற கல்வி
உன்னை முன்னேற்றலாம் நாட்டை முன்னேற்றாது.

187. உயிரிழப்பு ஏற்பட்டால் தான் உலகத்தின் பார்வைக்கு
ஒரு தவறானச் செயலால் நடக்கும் குற்றமே தெரிகிறது.

188. திருத்த மறந்த தவறுகளைத் திருத்து என்று
ஞாபகப்படுத்துகிறது தொடர் மரணங்கள்.

189. உழைப்பால் வரும் பணம் சந்தோசத்தை உருவாக்கும்
உழைப்பின்றி வரும் பணம் சந்தோசத்தை உருக்குலைக்கும்.

190. ஒரு நொடி கோபத்திற்கு இரையாகி விடுகிறது
நம் நெருங்கிய சொந்தங்கள்.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (7-Jul-20, 9:51 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 73

மேலே