கற்காலமல்ல

காவலரின் தற்கால நிலை

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காவலர் அனைவரும் வல்லவரோ
நல்லவ ரோவல் லநான்சொல்வேன்
பாவமல் லபலகுற் றம்செய்வார்
பயமிலா நடத்தி முடிப்பார்பார்
நாவால் வகைப்படுத் தமுடியாத
கடத்தல் கற்பழிப் புலஞ்சமுடன்
தாவர அபின்கஞ் சாவுடந்தை
ஆளையும் அடங்கத் தீர்ப்பராமே

காவல் பணியை பேடிசெய்யார்
பேடிகள் நடந்தினால் குழைவர்யார்
நாவலி மைமிக்க தமிழ்மக்கள்
கடுஞ்சட் டவிதியை பின்பற்றார்
காவல ரைப்பெண் கள்சாலை
மறியல் தேடல் பலவேளை
பாவம் நல்லவர் சேலைதூக்கி
சமமுன துமீசையை பாரென்பரே


ஆசிரியப்பா

எழுபதில் பழுதிலா போலீஸ் அலுவலர்
கழுத்தைப் பிடிக்கும் எழுத்து வேலை
திருப்பத் தூர்கோர்ட் திறமாய் முடித்துத்
திரும்ப ஆலங் காயபஸ் ஏறினேன்.
பின்னால் செக்கிங் பக்கல் என்சீட்
என்முன் ஒருயிளம் ஜோடி இருந்தது
அண்ணன் பீடியை வலிக்க அப்புகை
எங்கும் சூழ்ந்திட பீடியை
எடுத்து வீசென அவனிடம் சொன்னேனே

அவனோ பலரும் புகைப்பதைக் காட்டி
அவர்களைப் பிடிமுத லிலென்றான் நக்கலாய்
மக்கள் கொல்லெனச் சிரித்திட மானம்
அக்கணம் பறந்தது பஸ்ஸில் பாரு
மிட்டூர் வரஅவன் இறங்க முற்பட
முட்டியால் தடுத்துநான் உள்ளேத் தள்ளினேன்
அப்போ பஸ்ஸில் ஒருவழி மட்டுமே
ஆலங் காயம் வந்திட அனைவரும்
இறங்க அவனும் இறங்கினான் ஒரேயுதை
இரண்டு மூன்று குட்டிக் கரணம்
அடித்து உருண்டவன் ஊர்திகைக் கலாக்கப்பில்
ஊர்தியில் புகைப்பிடித் தல்கூ டாதது
ஊரா ருடனவன் மனைவி கெஞ்சிட
மன்னித்து வெளியில் விட்டேன்
மடையன் என்மேல் தனிவழக் குத்தொடுத்தானே

வாணியம் பாடியில் வழக்கு வந்தது
வக்கீல் ராமசா மியையவன் வைத்தான்
இளம்வக் கீலவன் இகம்யூனிஸ்ட் பாரெனக்
கோப்பைக் காட்டவும் தாக்கல் செய்யென்றேன்
வழக்கை ஊராரே மிரட்டி வாபஸ்
வாங்கவே செய்தார் பாரும்
பலவா ராய்பறிப் பார்மா னத்தையே

காவலர் தந்தையு டன்மகன் கொலைக்கு
காரணம் இவரிவர் என்றார் உண்மை
பெயில் வாராத பிரிவில் அவர்மீது
போட்டுள் ளேத்தள் ளுவதை விட்டு
அரசியல் பச்சோந்தி அத்தனை ஒப்பாரி
இறந்தவன் வீட்டில் இளைப்பாறி விசாரணை
அதிலும் பொய்க் கம்யூனிஸ்ட் பெண்ணாம்
அலிபோல் அங்கும் மிங்கும் ஒடுறாள
அநாகரீகம் மற்ற கொலைகள் சாதாவாம்
கடைமூடா பேர்வழி கொலைபட்டர் எத்தனை
விடை தெரியுமுன் அவனவன் குதிக்கிறான்
நீட்டினை நீக்கினானா வீண்போராட் டம்செய்தான்
நீட்டிட மாணவர் நம்பிமோசம் போனார்
யாரும் குழம்பிடா தீரிங்கே
யாரையும் குழப்பிடா பொறுப்பீர் நீங்களுமே

சட்டத்தை வீட்டில் எப்படியோ வெளியில்
சட்டத்தைப் போலீசா ரிடம்சொல் லாதே
சட்டத்தை கோர்ட்டில் வாதாடி வென்றிடு
போலீஸ் கொன்றால் கொலை கேஸ்போடு
தாலீம் காட்டினால் சுடத்தான் செய்வார்
பேடி அரசியல் தலைகள் செத்தவர்
வீட்டிற்கு ஒப்பாரி வைக்க ஓடுவதேன்
ஒருவன் போனாலின் னொருவன் போகிறான்
போலீஸ் கொலசெய்ய ஒட்டு விழுமா
காதல் கொலை கட்சிக் கொலையாக்கல்
சினிமா செட்டு போராட்டம் செய்கிறான்
சிந்தனை யற்ற சிறாரா மக்கள்
அறிவாளி அல்ல முட்டாளே ஏய்க்கிறான்
அவனழ நீயுமேன் அழுகிறாய்
அவனின் பொய்யழுகை நீஉணரா ததும்யேனோ

எழுதியவர் : பழனிராஜன் (7-Jul-20, 7:12 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 712

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே