இன்றைய காதல்

சோலை சினிமா என்று
-சுற்றித் திரிந்த பின்னே
வேலை இல்லை என்றால்
-விலகத் தயங்க மாட்டார்
காலை மலரும் முன்பே
-காலை வாறும் பெண்கள்
மாலை மாற்றும் முன்பே
-மனத்தை மாற்று வார்கள்
**
தாடி வளர்த்து சோகம்
-தன்னைக் காக்க மாட்டார்
பீடி போலே இளைத்துப்
-பித்தாய் ஆக மாட்டார்
மூடி மறைத்து வேறு
-முகத்தைத் தேடும் ஆண்கள்
போடீ என்றே தொலைத்து
-புதிதாய் பிறந்து கொள்வார்.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Jul-20, 1:49 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : indraiya kaadhal
பார்வை : 135

மேலே