மனைவி
பசியின் குறிப்பறிந்து வாய்க்கு
ருசியாய் உணவளித்த உத்தமி.
நலம் குன்றி நானிருந்தால்,
பலம் தருவாய் அருகிருந்து.
சினமாய் நான் சீறும் தருணம், உன்
சிரிப்பால் அந்தத் தீயணைப்பாய்.
பெற்ற பிள்ளை கல்வியில் மேம்பட,
உற்ற செல்வம் மேலும் பெருகிட,
பொழுதெல்லாம் ஓயாது போராட,
விழுதாக வந்துதித்த விந்தையிவள்.
ஆலமரமாய் பரந்து நின்று,
அகலமாய் நிழல் கொடுத்த,
அன்பே உன் அருமை,
நேற்றுவரை ஏனோ புரியவில்லை.
சற்றும் என் அறிவை எட்டவில்லை.
முன்பின் தெரியாத என் கரம் பற்றி,
எந்நாளும் உடன் நடந்த உன் கடனை,
விண்ணுலகம் போய்ச்
சேர்ந்தாலும்,
என்னுள்ளே நான் விதைத்து வைப்பேன்.
பட்ட கடனடைக்க, நான்
விட்ட என் உடலெடுத்து,
பூவே, உன்னைச் சேர,
பூமியிலே புகுந்திடுவேன்.
ச.தீபன்
94435 51706.