நாத்திகம்

இவர் நாத்திகர்.....
' இறைவன் என்பது வெறும் கற்பனையே
படைத்தவன் யாரும் இல்லை ' என்பார்
இவர் ஆஸ்திகர்...........
இறைவன் என்பவர் உள்ளார்
படைத்தவர் அவரே, காப்பவர் அவரே
அளிப்பவர் அவரே, பின் படைத்து
காப்பவர் அவரே'
என்பது இவர் தீர்க்க நம்பிக்கை

அவரவர் நம்பிக்கை அப்படியே
இருந்துவிட்டு போகட்டுமே
எது சரி, எது தவறு என்பதைக்
காலம் ஒரு நாள் தப்பாமல் சொல்லும்
காத்திருப்போம் அதுவரை .... என்று
ஒருவர் நம்பிக்கையை மற்றொருவர்
மதித்து இருப்பின் வாழ்வில் நிம்மதி..

வீணே இவர் நம்பிக்கை தவறு
இவர் வழிபாடு தவறு என்றெல்லாம்
கூறுவதன் நோக்கம் என்னவோ....

தொன்மொழி எம்மொழி தமிழ்மொழி
திருக்குறள் தமிழ் வேதம்
என்றெல்லாம் பேசும் நாத்திகர்
திருக்குறளில்'திரு' என்பதன்
அர்த்தம் புரியாதவரா...?
இல்லை பத்து குறட்பாக்களில்
திருவள்ளுவர் 'இறைவனை நாடு
அவன் தாள்களை பற்று ' என்று
என்று கூறுவதை மட்டும்
புறக்கணிப்பவரா...?


அவரவர் நம்பிக்கை
அப்படியே இருப்பதில் இவருக்கு
இவருக்கு ஏன் வெறுப்பு...

காலம் பதில் சொல்லும்
காத்திருப்போம்
கண்ணன் கீதையில் கூறுவது அஃதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-20, 2:37 pm)
பார்வை : 69

மேலே