காதல் தெய்வம்
என் ஆராதனைக்குரிய தெய்வம்
என்றும் நீயேதான் என நினைத்து
உன்னையே மனதில் பூஜித்து வந்தேன்
என் கற்பனை நாயகியே என்னென்பேன்
நான் காண்பது கனவா நனவா
என் காதல் தெய்வம் நீ
நா நினைத்த கற்பனை
உருவிலேயே இதோ என்முன்னே
எனக்கு காட்சி தருகின்றாய்
இனி இந்த ஆராதனை எதற்கு
தெய்வமே உன் காட்சி கிட்டிய பின்