காதல்

காதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றான்
ஏன் என்றேன் ......... அது கிட்டவே இல்லை அதனால் என்றான்
அது கிட்டினால் நம்பிக்கை வருமா என்றேன்
கிட்டட்டும் பார்க்கலாமென்றான்
கிட்டியது ........ இப்போ என்ன சொல்வாய் நண்பா என்றேன்
நிலைக்கட்டும் அப்போ சொல்வேன் என்றான்
நிலைத்தபின் இப்போ என்ன சொல்வாய் என்றேன்
ஏன் நிலைக்கின்றதோ என்றான்
ஏன் என்றேன் ? காதல் கசக்கிறதே என்றான்
நீ தேடி அலையும் காதல் எதுவோ என்றேன் தலை பிய்த்துக்கொண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-20, 3:27 pm)
Tanglish : kaadhal
பார்வை : 205

மேலே