ஆராதனை

அன்பே உன் அழகை
வர்ணித்து கவிதை
எழுத நினைத்தேன்...! !

நினைத்தவுடன்
வார்த்தைகள்
அணிவகுத்து நின்றன...! !

மேலும்
அவைகளிடையே
கடுமையான
போட்டா...போட்டி..! !
கவிதையில்
இடம் பிடிக்க...! !

என் மனதிலும்
கடுமையான
போராட்டம்....! !
எந்த வார்த்தையை
கொண்டு உன் அழகை
வர்ணிப்பது என்று...! !


கடைசியில்
முடிவு எடுத்தேன்..
உன் அழகை
வார்த்தையால்
சிறைப்படுத்த
வேண்டாமென்று...!

நேரில் வந்தே
உன்னை ஆராதனை
செய்து ரசிக்கிறேன்..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jul-20, 2:32 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aarathanai
பார்வை : 71

மேலே