தடையை மீறிவிட்டேன்
ஊரடங்கு உத்தரவு
ஊரே அடங்கியது
எந்த செயலுக்கும் தடை
வீட்டை விட்டு வெளியே
வரவும் தடை...! !
மீறினால் தண்டனை...! !
உன்னை நினைக்காமல்
என் மனம் அடங்குமா..!
தடையை மீறி விட்டேன்
என்ன தண்டனை
வந்தாலும் பரவாயில்லை
அன்பே உனக்காக..!
ஏற்று கொள்கிறேன்.
--கோவை சுபா