புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 37----
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௩௭
361. ஒருவன் இறக்கும் போதும் பலபேர் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால்
அவன் வாழ்வதற்காகப் பிறரை வாழ விட்டிருக்க மாட்டான்.
362. தன்னை வென்றவன் மற்றவரிடம் தோற்றுப் போவதில்லை
தன்னை வெல்ல மறந்தவன் அனைவரிடமும் தோற்றுப் போகிறான்.
363. வாழ்க்கை என்பது ஒரு வாகனம் அதை நீ தான் ஓட்ட வேண்டும்
அதன் போக்கில் ஓட விட்டால் விபத்துகளே நடக்கும்.
364. குதிரைபோல ஓடுபவன் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
குதிரையாக ஓடுபவன் தோல்வியே பெறுவான்
குதிரைக்கு இலக்குத் தெரியாது.
365. உடற்சோர்வு உழைப்பைக் குறைக்கும்
மனச்சோர்வு உயர்வைக் குறைக்கும்.
366. உலகில் எவரும் நிறைவோடு வாழ்வதில்லை
ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஏதோ? ஒரு குறை இருக்கும்.
367. துன்பத்தையோ?... இன்பத்தையோ?...
நினைத்துக் கொண்டு இருப்பவரின் வாழ்க்கை உயர்வு பெறாது.
368. நெருங்கிய இருவரின் சண்டையில்
நடுநிலையை மறந்து நீ நடந்து கொண்டால்
நீயே அங்கு எதிரியாகி நிற்பாய்.
369. மது உடம்புக்கும் உயிருக்கும் கேடு
அதை விட்டால் வாழ்வாய் குடும்பத்தோடு
விட மறுத்தால் விரைவில் சுடுகாடு.
370. ஏழையோ?... பணக்காரனோ?...
உன் குணத்தைப் பொருத்தே உனக்கு மதிப்பு.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..