நிரந்திர நிழல்கள்

நிரந்தர நிழல்கள் .

ஏனோ இவர்களுக்கு
இறக்கம் காட்ட யாரும் வருவதில்லை. 
எதற்காக இவர்களை வீட்டை விட்டு துரத்தப்பட்டார்கள்.
அப்படி என்ன தவறு செய்தார்கள். 
மகா பாவம் செய்தவர்கள் எல்லாம் மாட மாளிகைகளில் கூட கோபுரங்களில். 
அந்த ஆடம்பர வாழ்க்கையா
இவர்கள் கேட்டார்கள்.
இல்லையே!
ஒதுங்கக் குடிசை அது கூட
இவர்களுக்கு இல்லையே.
என்ன காரணம்?
மானுடத்தின் முரன்.
மனிதர்களின் சுயநலம்.
தெருக்கோடி குப்பத்தோட்டி பக்கத்தில் இவர்களின் வழக்கமான இருப்பு.
அழுக்கான ஆடை.
எப்போது சாப்பிட்டார்கள்.
அவர்களுக்கே தெரியாது. 
இவர்கள் பிச்சைக்காரர்கள் என்று நினைக்க வேண்டாம்.
விளிம்பு நிலையில் உள்ள ஏழை என்றும் நினைக்க வேண்டாம். 
தனியாக சில நபர்.
ஜோடியாகவும் சில நபர்கள்.
உண்மையில் யார் இவர்கள். 
சராசரி மனித வாழ்க்கையைச் 
சமரசம் செய்யத் தெரியாத பரிதாப மனிதர்களா.
கள்ளம்கமடற்ற உள்ளத்தால்
தன் வாழ்க்கையை முழுவதும்  தொலைத்தவர்களா.
எந்த வெறுப்பு, விருப்பு இல்லாமல் வாழும் இந்த மனிதர்கள்
உண்மையில் கடவுளின் பிள்ளைகளா?அடிப்படை வசதி கூட விரும்பாத இவர்கள், 
யாருக்கும் கெடுதல் நினைக்காத இவர்கள், 
உடல் தான் அழுக்கு
உள்ளம் முழுக்க தூய்மை.
எப்போதாவது பேசுவார்கள். 
அது அத்துணையும் உண்மை. 
வேகமான வாழ்க்கையில் இவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை
யார் இவர்கள்?
முகவரி தெரியாத
மனிதர்களா?
- பாலு.

எழுதியவர் : பாலு (29-Jul-20, 10:09 pm)
சேர்த்தது : balu
பார்வை : 80

மேலே