நிலைக் கண்ணாடிகள்
நிலைக் கண்ணாடிகள்
இரவின் பிடி தளர்த்தித்
திமிறிப் புலர்ந்த
அவ்விடியலின் பூபாளத்தைத்
தென்றல் தன் தூரிகைகளால்
வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறது இதமாய்!
பேருந்தின் சன்னலோர இருக்கையை
தனதாக்கித் தொடங்குகிறது
அன்றைய என் பயணம்!
ஓட்டுனரின் சடுதி நிறுத்தத்தில்
முன்னமர்ந்த
அவளோடு முட்டிக் கொண்ட
என் பார்வைகள்
இனம் புரியா இன்பத்தில்
சிறைப படுத்தப் படுகின்றன!
முன் அனுமதி பெற்றிரா
என் புன்னகைகள்
அவள் புன்னகையோடு
உரசிக் குதூகலிக்கின்றன!
மூக்கில் குவிந்த
என் கண்களின் பிம்பங்கள்
அக்கணமே மீள்கிறது
அவளிடமிருந்து பிரதிபலிப்பாய்!
நிலைக் கண்ணாடி
முன் இல்லாததாய்
உறுதி படுத்தித்
திகைகிறது மனது!
ஆம் !குழந்தைகள்
நாம் விதைத்ததை
விளைவிக்கும் விளை நிலங்களாய்!
சு.உமாதேவி