ஐந்திணை ஐம்பது

ஐந்திணை ஐம்பது என்ற நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார் .

மாறன் என்னும் சொல் பாண்டியனை குறிக்கும்

பொறையன் என்ற சொல் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மணனைக் குறிக்கும் .

இந்த புலவர் இந்த இரு மன்னர்களுக்கும் நண்பர் ஆதல் நோக்கி இவரை " மாறன் பொறையன் " என்று மக்கள் வழங்கிருக்கலாம் . மாறன் மகன் பொறையன் என்று இப்பெயருக்குப் பொருள் காண்பது சங்ககால மரபு .

திணை ஒன்றுக்குப் பத்து பாடல்கள் என்று ஐந்து திணைக்கும் (குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் பாலை )ஐம்பது பாடல்கள் இந்த நூலில் உள்ளன .

இது ஒரு அகநூல்

இந்த நூலுக்கு 13 ம் நூற்றாண்டில் தோன்றிய பழைய உரை ஒன்று உண்டு .

தமிழாசிரியர் அ . நடராசபிள்ளை 1935 ஆம் ஆண்டு எழுதிய உரை ஒன்றும் இந்த நூலுக்கு உண்டு .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (8-Aug-20, 8:12 pm)
பார்வை : 208

சிறந்த கட்டுரைகள்

மேலே