ஐஸ்வர்யா ராயை எனக்கு ரெம்பப் பிடிக்கும் கவிஞர் இரா .இரவி
உலக அழகி ஐஸ்வர்யா ராயை
எனக்கு ரெம்பப் பிடிக்கும் கவிஞர் இரா .இரவி
உலக அழகி என்பதற்காக அல்ல
உன்னத விழிகளைத்
தானம் தரச் சமதித்ததற்காக
விழிகள் தானம் பற்றி
விழிப்புணர்வு விதைத்ததற்காக
உடல் அழகி மட்டுமல்ல
கருத்து அழகி என மெய்பித்தற்காக
உலக அழகி ஐஸ்வர்யா ராயின்ரசிகர்களே
விழிகளைக் கட்டிக் கொண்டு ஒருமுறை
சாலையின் வழியில் நடந்துப் பாருங்கள்
பார்வையற்றோரின் துன்பம் புரியும்
பார்வையற்றோரின் துன்பம்போக்குவோம்
விழிகளைத் தானம் செய்யுங்கள்
இறந்த பின்னும் இயற்கையை ரசிக்கலாம்
மண்ணிற்கும் தீயுக்கும் இரையாகும் விழிகளை
மனம் உவந்து மனிதர்களுக்கு வழங்குங்கள்
பிறந்ததன் பயனை பயனற்றோர்
இறந்த பின்னாவது நிறைவேற்றுவோம்
பார்வையற்ற இருவருக்குப் பார்வையாவோம்
பாரினில் பார்வையற்றோர் இல்லை என்றாக்குவோம்