கண்ணீரின் கதை கவிதையாகிறது

கண்ணீரின் கவிதையா -
என்னடா இது !!!!!!!

பொதுவாய் மனிதனிடத்தில்
சிரிப்பும் அழுகையும் நிறைந்தே கிடக்கும்-
சிரிப்பு சிறிது நேரம்
ஆனால் அழுகையின் வலியோ அதிகம் ..............

காலத்தின் சீற்றத்தில்
காயம்பட்ட மனமெல்லாம்
குமுறும் எரிமலையாய்
அந்த கண்ணீர் குற்றால அருவியாய் ..............

போராட்டமான வாழ்க்கையில்
பொல்லாத அனுபவங்கள்
நீரோட்டமாய் நிரம்பி வழியும் கண்ணீர்...........

நெஞ்சத்தில் நிறைந்திருக்கும்
நீங்காத வலியினை வெளிப்படுத்த வழியில்லாமல்
கண்ணீர் சொல்லும் கதை அதிகம் ..............

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும்போது
இதயம் மட்டும் அழுவதில்லை
கண்ணீரும் கதை சொல்லும்
சில நேரங்களில் அதுவே கவிதையும் சொல்லும் ............

எழுதியவர் : விநாயகமுருகன் (11-Aug-20, 7:24 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 182

மேலே