திடீர்மாற்றம்

மாலை நேர சூரியன் மறைய தொடங்கும் முன் பூக்கள் வாட தொடங்கி விட்டன .ஒரே சத்தம் சந்தையில் பூ கூடை 200, 250 என கூவல் கூவி தொண்டை தண்ணீர் வற்றும் வரை கத்தினான் சேகர் ..பாவம் என்ன செய்வது அவன் தொழில் என வருத்த பட மட்டுமே முடிந்தது தங்கையால் .

வறுமைக்கு முன்னால் இந்த வேதனை ஒன்றும் பெரிதல்ல என கூறி சமாதானம் சொன்னான் சேகர்.தாயும் ,தந்தையும் இல்லாத தங்கை மீனாவிற்கு அண்ணன் சேகர் மட்டுமே ஆதரவு .தினமும் சந்தையில் சேகரின் வாழ் நாள் கழிகிறது. பணம் மட்டும் அன்றாட செலவிற்கு போக நகர்புர வங்கியில் தங்கைக்கு திருமண செலவிற்கு பணம் சேர்த்தான் .ஆசைகள் மீது பற்று இல்லாத காரணத்தினாலோ என்னவோ அதுவும் சாத்திமாயிற்று .

ஒரு நாள் அதிகாலையில் பூ மூட்டைகள் வாங்க வரிசையில் முந்தியடித்து நின்றான் ஏலம் கேட்பது கூட பரவாயில்லை போல, அதை விட மோசமான நிலை பேரம் பேசுவது..ஆண்கள் விட பெண்கள் இதில் கைதேர்ந்து இருந்தனர்.ஒரு வழியாக பூ மூட்டையை வாங்கி பேருந்து நிலையத்தில் பயணம் செய்ய தொடங்கினான் தீடீர் எண்ண அலைகள் வேற தொழில் இல்லையா? வாழ் நாள் முழுவதும் கஷ்டப்பட‌ தான் பிறந்தோமா? என அவனுக்கு எழுந்த மன கேள்விகளுக்கு விடை தெரியும் முன் வீடு வந்து சேர்ந்தான் .தங்கை மீனா அண்ணுக்காக வழக்கம் போல டீ யை போட்டு எழுந்து கோலமிட தொடங்கினாள் .பள்ளிக்கு விரைந்து செல்வதற்கு ..

தினமும் காலை வேலை மட்டும் எப்போதும் விரதம் .மதியம் வேலை சாப்பாடு அண்ணன் பூ மூட்டையை சந்தையில் சேர்த்து விட்டு வழக்கமான கடையில் கடன் சொல்லி இரண்டு தோசைகள் வாங்கி கொண்டு போவான் சேகர் ,தங்கை இவற்ரை எப்போதும் ஏதிர்பார்பதில்லை பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு விட்டேன் நீ சாப்பிடு என்று பாசத்தை அவ்வபோது வெளிகாட்டினாள் படிப்பில் முதல் மாணவி மீனா தான் அவளின் ஆசை மருத்துவராக வேண்டும் என்று தான் .தன் குடும்ப நிலை பெரும் தடை கல்லாகவே இருந்தது . 2 படித்து முடிக்க இரண்டு மாதங்களே உள்ளன.எதிர்காலத்தை பற்றி கவலை வரும் போதெல்லாம் கண்ணீர் காலியாயின கண்ணீல்… நல்லா பரீச்ச எழுது நல்ல மார்க் வாங்கி அண்ணன சந்தோசபடுத்துமா என்றான் சேகர்.கண்டிப்பா என்று கண்ணீல் பதில் சொன்னாள் மீனா…

சேகர் பூ மார்க்கெட்டை மட்டுமே நம்பி தொழில் செய்து வந்தான்.முக்கிய விழாக்களின் போது விலையேற்றத்தை மனதில் வைத்து அளவாக வாங்கி விற்பனை செய்து வந்தான் .மீனாவிற்கு தேர்வு வர தொடங்கியது அந்த பயதிலேயே அவள் ஓடாக தேய்ந்தாள் மீனா ஒரு வழியாக பள்ளி படிப்பை முடித்து மதிப்பெண் பட்டியலை வைத்து ஒரு தனியார் கல்லூரியில் ”செவிலியர்” பயிற்சி படிக்க தொடங்கினாள். புது உலகம் ,வெளி உலகம் .வீடு,பள்ளி,சந்தை என இருந்தவளுக்கு கல்லுரி வாழ்க்கை பெரும் மாறுதலை உண்டு செய்தன.

சேகர் ஒரு மாலை நேரத்தில் பூ கூடையை ஒரு கல்யாண மகாலுக்கு கொண்டு செல்ல ரிக்சாவில் சென்று கொண்டிருந்தான்.அப்போது மீனா யாரோ முகம் தெரியாதவனுடன் கைகோர்த்து சிரித்து பேசி கொண்டிருந்தாள்.சேகரால் நம்ப முடியவில்லை.தங்கையை உலகமாக இருந்த சேகரால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை.இதை பற்றி கேட்க வீட்டில் காத்து இருந்தான் . ஆனால் 9 மணி வரை மீனா வீட்டிற்கு வரவில்லை.பத்து நிமிடம் கழித்து மோட்டார் வாகனத்தில் மீனாவை இறக்கி விட்டு சென்றான் முகம் தெரியாதவன் .மீனா வேக வேகமாய் உள்ளே வந்து துணியை மாற்றி சாப்பிடீங்களா என்று கேட்டாள் இல்லமா நீ சாப்பிடு என்றான் .மீனா, நான் சாப்பிட்டேன் என்று அவன் எதிர்பார்க்காத பதிலையளித்து தூங்க சென்றாள் .

சேகர் ,மீனாவிடம் இந்த உலகம் பொல்லாத உலகம் யாரையும் நம்ப கூடாது என்றான்.உடனே அவளுக்கே உரித்தான பாணியில் எல்லாம் எனக்கு தெரியும். நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை என சொல்லி தவற்றை நியாயப்படுத்தினாள். மேலும் பேச விருப்பம் இல்லாத போல் தூங்க சென்றாள் .சேகர் மறு நாள் வேலைக்கு செல்லவில்லை நான் யாருக்காக வேலை செய்ய வேண்டும் .மீனாவே தனக்கு வேண்டிய உறவை தேர்ந்தெடுத்து விட்டாள் என மனமுடைந்து போகிறான் மீனா தன் தவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று புலம்பி புலம்பி மன நலம் பாதிக்கபட்டவனாய் மாறுகிறான் ..

மீனா சேகரை விட்டு தன் காதலனோடு செல்கிறாள் .புது வாழ்க்கை மூன்று மாதங்களில் நிறைவு பகுதியை அடைகிறது.பின்பு சேகரை காண தம் சொந்த ஊருக்கு செல்லும் போது சேகர் இறந்து விட்டான் ,பூ கடையில் வேலை செய்து இருந்தும் இறுதி ஊர்வலத்தில் பூ கூட போடயாருமில்லை என்று செய்தி கேட்டு கதறி அலுகிறாள் .பின்பு தன் அண்ணனை நினைத்து கல்லூரி படிப்பை தொடர்கிறாள்.மாலை நேரங்களில் மருத்துவமனையில் வேலை செய்து பின்பு கல்லூரி படிப்பை முடித்து அதே மருத்துவமையில் முழு நேர செவிலியர் வேலை செய்து தன் காலத்தை கழிக்கிறாள் அவள்….


இப்படிக்கு,
மதுரைமணி .

எழுதியவர் : மதுரைமணி (11-Aug-20, 8:01 am)
பார்வை : 174

மேலே