மழை

*****************************************************************

ஒன்றை
மற்றொன்றாய் மாற்றிவிடும்
அற்புதத்தை
நொடிப்பொழுதில் நிகழ்த்திவிடுகிறது
இந்தத் திடீர் மழை.

சுருண்டு படுத்திருந்த​
கோணிப்பையே
விரிந்த குடையுமானது
அந்தச் சாலையோர முதியவருக்கு..

பூக்கள் சுமந்த​ ​
காலிக் கூடையே
வாசம்வீசும் குடையுமானது
அந்தப்​ பூ விற்கும் பெண்ணிற்கு..

பயமுறுத்திய​ தேர்வின்
பரிட்சை அட்டையே
பாதுகாக்கும் குடையுமானது
அந்தப்பள்ளிச் சிறுவனுக்கு

கை பிடித்து நடத்திச் செல்லும்
தாயின் சீலைமுந்தானையே
விசாலமான​ குடையானது
அந்தக்​ குட்டிப்பையனுக்கு..

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (11-Aug-20, 10:57 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
பார்வை : 189

மேலே