வளர்ப்பின் மாண்பில்

மெதுவாக மெதுவாக
படிகின்ற அன்பின் இழைகள்
மழலையின் இதயத்தில் ,
அது நாளாக நாளாக
பாசம் எனும் மலரால்
மெருகேற்றப் படுகிறது ,
அங்கே குதூகலத்தில் குழந்தை
ஆனந்தத்தில் சிரிக்கிறது ,
ஆகா தொட்டு தூக்க
ஆசையுடன் சொந்தங்கள் ,
இதுமாதிரி இதேமாதிரி
அன்பின் கரங்களில் பாசமுள்ள
உறவுகளுக்குள்ளும் புன்னகையில்
ஆனந்தத்தில்
மழலையின் வளர்ச்சி,
நாம் காட்டும் அன்பிலே
இதயமெங்கும் பூரிக்கும் குழந்தை
வளர வளர அன்பில் பண்பில்
வாழவும் வழிகாட்டியாகவும்
வாழ ஏங்குகிறது, வாழவும் செய்கிறது.
மனித வரலாற்றில்
இவ்வாறு வாழும் ஒவ்வொரு மனிதனும்
படைப்பின் ஆற்றலை அறிகின்றான்
அர்த்தத்துடன் வாழுகின்றான்
முழு மனிதனாக ,
அன்று தொட்டு என்றென்றும்
இவன்தான் மனிதனாக
அனைத்தும் வளர்ப்பின் மாண்பிலே ..

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Aug-20, 12:22 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 130

மேலே