இந்திய அரசியலமைப்பில் சமத்துவம் இல்லை

இந்திய அரசியலமைப்பில் சமத்துவம் இல்லை


கட்டளைக் கலி விருத்தம்

அந்தம் பெத்கரும் தலைமை ஏற்றிட
பந்து மாதவ ராவ்டிடி கேவுடன்
அந்த ஐயரும் நாயுடு எழுவர்
இந்தி யச்சட் டத்தையெ ழுதினரே

இந்திய அரசியல் சட்டம் இயற்றிய நாள்:- 26.11.1949

நேரிசை ஆசிரியப்பா

இந்துக்கள் எழுவர் சட்டமஎழுதியதை
இந்தியச் சட்டக்கு ழுவிடம் வாங்கி
காந்தி அம்பெத் கரிடம் தந்து
அடுத்து வேண்டிய இடத்தில் வேண்டியன
எடுத்துமே நுழைத்து ப்பட்டியல் பழங்குடி
மக்களின் சமூகம் உயர்ந்திடும் வழியை
இக்கணமே செய்ய காந்தி சொல்ல
தக்கபடி திருத்தாது நுழைத்துக் கெடுத்து
மொக்கை அரசியல் சட்ட மாக்கினார்
அரசியல் சட்டமேதை அம்பெத்கர்
பிறகென்ன பாரத சமத்வம் கெட்டதே

நேரிசை வெண்பாக்களால் ஆனது

இந்தியச் சட்டம் படித்தகாந்தி சொன்னபடி
தந்தார் தலித்முன்னேற் றம்காண - அந்தமேதை
அம்பெத்கர் தந்தார் திருத்தி சமத்துவத்தை
சம்மட்டி யால்கொன் றுமே


பிரிவு பதினைந்து நாலில் பிரித்தார்
விரியபட்டி யல்மலைவாழ் மக்கள்- பிரிவுகள்
சட்டம் தளர்த்தல் தடுக்க முடியாத
சட்டத் திருத்தம்கண் டார்

18.6.51 இல் சட்டத் திருத்தம் வந்தது,

பதினாறு ஒன்றில் நியமனம் வேலை
அதிலே சமத்துவம் சொன்னார் -- அதிலே
எதிலும் தலையீடு செய்வது கூடா
கதியே சமமென்றார் பார்

பிரிவு 16 இல் வேலை நியமனத்தில் ஆண் பெண் இனம் ஜாதி மதம் பிறந்த இடம் சொல்லி
ஒருதலைப் பட்சம் காட்டக்கூடாது என்கிறது.

பதினாறு மூன்றிலே மக்கள் சபையில்
மதிக்கும் பிரிவினர்க்கே வேலை --,இதிலேயும்
யாரும் மறுப்புசெய்தல் கூடாவெ னச்சொன்னார்
யாரும் சமமா இது

ஆனால் எந்த வகுப்போ எந்த இனமோ மக்கள் சப்பை கருதுகிறதோ அதை மறுக்கக் கூடாது
என்று சட்டம் 16 3இல் திருத்தியுள்ளது.

மக்கள்சபை முடிவுசெய்யும் எந்தவொரு மக்கள் பிரிவுக்கும் வேலைக்கு தகுந்தவர்
என்று கருதி வேலைக் கமர்த்தலாம். இதையாரும் மறுக்க முடியாது.

பிற்படுத்தப் பட்டோர் இடமொதுக்கல் தேர்ந்தது
தற்காப் பவர்க்கு எனச்சொல்லி -- அற்புதமாய்
சேர்த்தார் பழங்குடி பட்டியலை யேற்றிடச்
சேர்த்தார் சமத்வம் கெட

பிற்படுத்தப்பட்டோர் என்று உள்ளே புகுந்து அதிலும் பட்டில்யலினம் பழங்குடி இனமென்று
அவரவர் அதிக இடஒதுக்கீடு செய்து பல பட்டறை என்ற பலஜாதி சேர்ந்த மைனாரிட்டி
இந்துக்களை ஒரே போர்வையில் கட்டி ஒரே இனத்தில் சேர்த்து சரிசமம் இல்லாது
வழி நடத்துதல் எப்படி சரியாகும். பொது அது சமத்துவத் தேர்வு வரவே வராதா. இப்படியே
ஏமாற்றி இரண்டு தலைமுறைக்கள் சீரழிந் தார்கள்.

பதினாறு நாலி லிதைச்சேர்க்கப் பாரும்
எதிலும் நுழைந்தது ஏனோ -- அதிக
சமத்துவம் கெட்டதே இப்படி எங்கும்
சமத்துவம் பேசாதே நீ

பதினாலு ஏவிலே பட்டியல் மக்கள்
அதிலும் பழங்குடியுத் யோகம் -- அதிலும்
பணியில் ஒவ்வொருநி லையில் பணிந்து
பணியுயர்வு ஈய வழி.

அரசு உத்யோகத்தில் பதவி உயர்வில் பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கு வரிசை
பட்டியலில் சற்று முந்தள்ளி வக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு பதவி உயர்விலும்
அதில் எத்தனை நிலைகள் இருந்தாலும் ஒவ்வொரு நிலையிலும் முன் தள்ளி வைத்தல்
வேண்டுமாம். அப்படித்தான் நடக்கிறது.இதில் சமத்துவம் எங்கே இருக்கிறது.


பதினாலு பீயில் படுமோசம் சேர்க்கை
யதில்பதவி ஏற்றத் திலுமே - சதியாக
அம்முறை ஆளில்லை யென்றால் தொடராண்டில்
அம்மட்டில் சேர்க்கை அவர்

பிரிவு பதினாலு B உட்பகுதியில் நடப்பாண்டில் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடி
இனத்தாரின் இட ஒதுக்கீடு நிறைவடைய வில்லை எனின் அதை வேறு சாதியினருக் குக்
கொடுக்கக் கூடாது. அந்த காலியிடத்தை பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் க்கு அடுத்த
ஆண்டி அல்லது தொடர்ந்து வரும் ஆண்டுகளில் சேர்த்துக் கொடுக்கவேண்டும். வேறு
எந்த ஜாதிக்கும் வழங்கினால் செல்லாது.


இந்தியச் சட்ட முகப்பில் எழுதினார்
இந்தியமக் கள்சமம் பாரென்றார் -- இந்த
அரசியல் சட்டம் பதினைந்து நாலில்
கரவாய் கெடுத்தார் சமம்
கரவாய் =வஞ்சகமாய் கரவு = வஞ்சகம்

எழுதியவர் : பழனிராஜன் (12-Aug-20, 7:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 572

புதிய படைப்புகள்

மேலே