தன்னம்பிக்கை

என் தன்னம்பிக்கையே! நீ வீழ்த்திவிட்டாய் நான் வீழ்ந்துவிட்டேன். நான் உன்னை தட்டிவிட்டேனா! இல்லை தவறவிட்டேனா! என்று தெரியவில்லை. நீ என்னை விட்டுச் சென்று விட்டாய் நான் வீழ்ந்துவிட்டேன். நான் மாண்டு விடக்கூடாது என்று மண்டியிட்டுக் கேட்கிறேன் இறைவனிடம் என் தன்னம்பிக்கையை திரும்ப என்னிடம் தரச்சொல்லி. இன்பத்தையும், துன்பத்தையும் எவரோடும் பகிர்ந்துக் கொள்ள முடியாத சுயநலக்காரி நான். பிறரிடத்தில் எப்படி பொய் சொல்வேன்! நான் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று.. பலக் (கை)களால் வீழ்த்த முடியாத என்னை என் தன்னம்பிக்(கை) வீழ்த்திவிட்டது. நீ என்னுடன் இருந்தப்போது கற்றுத்தந்த பாடம் வீழ்ந்தவன் மட்டுமே வலி அறிவான்... வீழ்ந்த வேகத்தில் எழுந்திடு என்று ... நான் எழுந்துவிடுவேன்! தன்னம்பிக்கையே நீ என்னோடு இருந்துவிடு..
✍🏻 பாக்யா மணிவண்ணன்.

எழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (13-Aug-20, 10:54 pm)
சேர்த்தது : பாக்யா மணிவண்ணன்
Tanglish : thannambikkai
பார்வை : 1736

சிறந்த கவிதைகள்

மேலே