வாழ்க்கை தத்துவம்

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

*என்மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

ஆங்கிலம் என்னும்
மனைவியை விரும்பு
அதற்காக
தாய் என்னும் தமிழை
வெறுத்து விடாதே...!

🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡

கடவுள் விட்ட வழி என்று
நான்
எதையும்
விட்டுவிடுவது இல்லை...
ஏனெனில்...
கடவுக்கே!
மனிதன்
விட்டால்தான் வழி...!

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

நான்
ஒருபோதும்
செருப்பைக்
கேவலமாக
நினைப்பதில்லை...
அதிலிருக்கும்
அழுக்கைத்தான்...!!!

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

இன்றைய
சூழ்நிலையில்
எழுதி வாழ முடியாது
இருக்கும் போது....!
ஆனால்
எழுதுவதால்
வாழ முடியும்
இறந்தப் பிறகு...!

🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣

மனம்
நல்லதை தொட
எந்த அளவுக்கு தயங்குகிறதோ...
அதுபோல்
ஆயிரம் மடங்கும்
தயங்கும்
கெட்டதை விடுவதற்கு....!!!

⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫

கையிருக்கும்
ரேகையைப் பார்க்காதே
பணம் செலவாகும்...
கையிருக்கும்
உழைப்பை பார்
பணம் வரவாகும்....


*கவிதை ரசிகன்*

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-Aug-20, 6:00 pm)
பார்வை : 58

மேலே