தன்னிலை அறியேன்

ஒளியில் உயிர்கள்
வாழும் என்றால்..
இருளை தந்தது யார்...

மழலை பெறுவது
யோகம் என்றால்..
மலடும் தந்தது யார்..

பெண்கள் எல்லாம்
தாய்மை என்றால்..
விலைமாதர் தந்தது யார்..

ஆசைகள் கொள்வது
பாவம் என்றால்..
புத்தர் என்பவர் யார்..

கடவுள் என்போன்
காப்பான் என்றால்..
கதவை தந்தது யார்..
தன்னை காக்க
கதவை கேட்டால்
கடவுள் என்போன் யார்...

தீண்டாமை குற்றம்..தீண்டல் குற்றம்..
திருடல் குற்றம்..தனிமை குற்றம்..
இதையெல்லாம்
கற்று தந்தது யார்..
குற்றம் புரிந்தவன் யார்..

தொப்புள் கொடியில்
வண்ணம் இல்லை...
மாரமுதம் மட்டில்
மாற்றம் இல்லை.....
பூக்கள் தோற்கும்
மென்மை தேகம்
முத்தம் பெறுவதை
விட்டு விட்டு
அர்த்தம் புரியா
அடைமொழியில்
அடைவது ஏனோ..

காகிதம் பறித்து
மை திரவம் எரி..
விழிகளை விரித்து
நீலம் கிழி..

இதயம் நுளை..
அன்பினை விதை..
பொது மேகம் ஊற்றி
உன்னில் நனை..

சினம் வரிகளில்
வடி..
கண்ணீர் பூக்களில்
தெளி..
போதை மழலையின்
விழி..
தேவை இறைவியின்
மடி...

-ES

எழுதியவர் : Eswar (17-Aug-20, 1:41 am)
சேர்த்தது : Eswar
Tanglish : thannilai ariyaen
பார்வை : 107

மேலே