அப்பா
அப்பாவின் அன்புக்கு
உருவம் கிடையாது..
அப்பாவின் அன்புக்கு
வெளிவர நேரம் தெரியாது..
அப்பாவின் அதட்டலில்
அன்பு ஒளிந்திருக்கும்..
சில அப்பாக்களுக்கு தான்
அன்பாய் இருக்கிறோமென்று
அவர்களே உணர்வதில்லை..
அப்பாக்கள் ஆடைகளில்
ஆசை கொள்வதில்லை..
அப்பாக்கள் அணிகலன்களில்
நாட்டம் கொள்வதில்லை..
சந்ததிகளின் எதிர்கால பயத்தில்
தன் நிகழ்காலம் அழித்தவர்கள்..
இருந்தும் வாழ்வின் பெரும்பகுதி
அங்கீகாரம் அடையாதவர்கள்..
அதை எண்ணி என்றும்
அவர்கள் வருந்தியதில்லை..
தான் இல்லாவிடினும் தம்மக்கள்
நலமுடன் வாழ நினைப்பவர்கள்..
---------------
உணர்வுடன்,
சாம்.சரவணன்