எழுத்தாளர் மௌனி

தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியர் திரு மௌனி அவர்கள் . இவர் மிக சில கதைகளையே எழுதியிருந்தாலும் , அவை ஒவ்வொன்றும் கால ஓட்டத்தில் நிமிர்ந்து நிற்பவை .

1907 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் செம்மங்குடி என்ற கிராமத்தில் பிறந்து 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் நாள் சிதம்பரத்தில் அமரரானார் எழுத்தாளர் மௌனி .

தன் 78 ஆண்டு கால வாழ்க்கையில் எழுதியது வெறும் 28 சிறுகதைகள் மற்றும் 2 கட்டுரைகள் மட்டுமே . இவரின் கதைகள் ஒவ்வொன்றும் இரவாய் புகழ் பெற்றவை என்கிற பிம்பத்தோடு தான் மௌனி எப்போதும் அறிமுகம் செய்யப்படுவார் .

அக உலகத்தை எழுத்தில் கட்டியெழுப்பிய முதல் தமிழ் எழுத்தாளர் அவர் தான் என்பது அவர் குறித்த இன்னொரு பிம்பம் .

இவரின் கருத்துக்களில் எழுத்துகளில் இருந்து நேர் முரண்பட்டு நிற்பவர் எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் . ஆனாலும் அவருக்கு மௌனியின் மீது எப்போதுமே தனி மரியாதையும் பெரும் மதிப்பும் இருந்தது என்று அவரே பல மேடைகளில் கூறியிருக்கிறார் .

ஆர் எஸ் மணி என்பது இவரின் இயற்பெயர் .

மௌனி என்னும் புனைப்பெயரை அவருக்கு சூடியவர் ஆசிரியர் பி எஸ் ராமையா .

புனைப்பெயரை பொய்யாகி நிறைய பேசுகிற குணம் அவருக்கு என்பது இன்னொரு நகை முரண் .

மௌனியின் மொத்த படைப்புகள் 24 சிறுகதைகள் மற்றும் இரண்டு கட்டுரைகள் .

அழியாச்சுடர் என்ற அவரின் புகழ் பெற்ற ஒரு சிறுகதை 1937 ஆம் ஆண்டு மணிக்கொடி இதழில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது .


மௌனி எழுதிய சிறுகதை பட்டியல் இதோ

எழுதியவர் : வசிகரன் .க (17-Aug-20, 4:00 pm)
பார்வை : 122

சிறந்த கட்டுரைகள்

மேலே