ஒரு நிமிடம் ஆலமரம்

நேற்று மதிய உணவுக்குப்பின் அலுவக முன் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தபோது கேட்காத யாசகத்திற்கு கிடைத்த பிச்சை

அடர்கிளை கொண்ட ஆலமரம்
படமெடுக்க முடியாத பாம்புகளாய் விழுதுகள்
பக்கத்து குட்டி மரத்தோடு உரசி உரசி சரசம் செய்யும்
பருவம் எய்திய ஒரு கிளை
காற்றை தடுக்க முடியாது
தள்ளாடியது பல இலைகள்
ஒளியை வடிகட்டி சிதறு தேங்காவாய்
பூமிக்கு அனுப்பி கொண்டிருந்தது
அடர்கிளை இடைவெளிகள்
விழுதுகளை தொங்கி விழுந்த பின்னும்
சிரித்து மகிழ்ந்த மழலைகள்
வேகமாய் வீசிய காற்றால் இலை ஒட்டியிருந்த துளிகள் தெறித்து விழுந்து ஒரு நொடி மழை
அலுவக மணிசத்தம் கேட்டு கிளையசைத்து வழியனுப்பியது ஆலமரம்

எழுதியவர் : இளவல் (20-Aug-20, 12:01 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 51

மேலே