இயற்கையும் காலமும்

வானிடை இயங்கிய ஆதவன் வரம் கொடுத்தனுப்பிய நிலவும்
நானிக்கலைந்து மீண்டும் தன் நாட்டிடை சேர
புன்சிரிப்போடு பூத்தனன் ஆதவன் மீண்டும்
ஆழிப்பெருங்கடல் அடியிலிருந்து நானிச்சிரித்து
நாற்புரமும் கதிர்வீசி நற்காலைதனை நமக்களித்தான்
ஆற்றிடை துள்ளும் கயலாய் நாற்றிணை கொஞ்சும் காற்றாய்
நறுமணம் வீசும் மலராய் வேற்றுமை இல்லா மனமும் - கண்டு
பூவிடை தாவும் வண்டாய் புதுப்புது உறவுகள் சேர்ப்போம்
உங்கள் இதயத்தின் வரப்புகளில் அன்பெனும்
நாற்றிணை ஆழமாய் பதியுங்கள்
கருணையின் நீருற்றி காவல் செய்யுங்கள்
நீருற்றியவனுக்கு மட்டும் நிழல் தராது மரம்
எந்த மேகத்திற்கும் நாம் சீர் செய்வதில்லை மழைக்காக
எந்த பறவையோடும் நீங்கள் ஒப்பந்ததாரர் அல்ல விதை தூவுவதற்கு
இதுவே இயற்கையின் இசைவு
இது ஒரு தொடர் நிகழ்வு
எச்சட்டமும் தண்டிக்கமுடியாத மழலையின் நடனம் போல
இயற்கையின் ஆனந்த தாண்டவமிது
மரத்தின் எதிர்பார்ப்பற்ற நிழல் சேவையும்
மேகத்தின் நீர்ப்பொழிவும் பறவையின் வியாபாரமற்ற விதை
தூவலின் அடியில் மறைந்திருப்பது என்ன?
கருணை கருணை கருணை அது மட்டுமே
இந்த கருணையை உண்டுதான் காலம் நம்மை கடந்து போகிறது
இல்லையேல் நாமெல்லாம்
ஒரு நொடியை கூட கடத்த முடியாத உயிருள்ள சிலைகள்தான்

எழுதியவர் : இளவல் (20-Aug-20, 12:36 pm)
சேர்த்தது : இளவல்
Tanglish : iyarkaiyum kaalamum
பார்வை : 179

மேலே