கைபேசி
______
எல்லா விளக்குகளும்
அனைத்த பின்னும்
உள்ளங்கையில்
உறங்க மறுக்கும்
மின்மினி பூச்சி..
மின்மினி பூச்சியை
களைப்பின்றி தொடரும்
விட்டில் பூச்சிகளாய்
நம்மிரு விழிகள்
கடைசியில் அயர்வதோ
விடியற் காலையில்...
_---------
சாம்.சரவணன்