ஏழை வீடு
மழைக்கும் வெயிலுக்கும்
திறந்திருக்கும் கதவு இது -ஏனென்றால்
இது ஏழையின் வீட்டு கூரை ...............
பட்டை தொட்டு பார்த்ததில்லை
இங்கு கெளரவம் கந்தலுக்குள் ...................
அறுசுவை உணவு அவசியமில்லை
அரைவயிறு பரம திருப்பதி ................
புன்னைகை இங்கு அதிகமிருப்பதால்
பொன்னகைக்கு அவசியமில்லை .............
கந்துவட்டிக்கு வாங்கி
கட்டிய வீடில்லை இது -
அதனால் இங்கு கவலையும் இல்லை ...................