மீண்டும் நீ மௌனமானாய்

மௌனத்திற்கு மரியாதை செய்ய
ஒரு கவிதை தந்தேன்
புன்னகையில் நன்றி சொன்னாய்

புன்னகையின் அழகைப் பாராட்டி
ஒரு கவிதை தந்தேன்
மீண்டும் நீ மௌனமானாய்
ஒரு வித்தியாசமான பார்வையுடன் ...

எழுதியவர் : கவின் சாரலன் (6-Sep-20, 4:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2835

மேலே