காதல் கொஞ்சம் காமம் கொஞ்சம்

இருமனம் இணைந்து
திருமணம் முடிந்தது!


இரு உடல் இணையும்
இருள் நேரமும் வந்தது!


இருவரின் பார்வைகளும் பதறி
அங்கும் இங்குமாய் சிதறி ஓடியது!


இறுக அணிந்திருந்த ஆடைகள்
அனைத்தும் விடுதலை பெற்றது!


நாணத்திற்கு நாள்கணக்காய்
விடுப்பு அழிக்கப்பட்டது!


அணிகலன்கள் எல்லாம் அவிழ்த்து
ஆயுள் தண்டனை அழித்து
சிறையில் அடைக்கப்பட்டது!


இருவரின்
ஆசைகள் யாவும்
அணிவகுத்து நின்றது!


இரு உயிரும்
தயக்கம் கொண்டது!


பின்பு நான்
தைரியத்தை கால் கிலோ
கடன் வாங்கி கொண்டு
உனதருகினில் நெருங்கினேன்!


என் மூச்சுக்காற்று
உன் தேகம் உரசும் போது
உன் உடல் சிலிர்த்தது!!!
என் உயிர் துடித்தது!!!


நான் விரல் கொண்டு
ஆரம்பம் செய்யும் போது
வெட்கத்தில் வெடுக்கென்று
என்னை தள்ளிவிட்டு ஓடினாய்..
ஓடிய உன்னை
பட்டென்று கை பிடித்து..
சட்டென்று கட்டியணைத்தேன்..
வாயடைத்து போய் நின்றாய்!
அடைத்த வாயினினை
மெல்ல திறந்தேன்
என் இதழ் கொண்டு!


சொக்கி போய்
விழுந்து விட்டாய்
என் மடியினில்!


மிச்சமின்றி
தொலைந்து விட்டேன்
உன் அழகினில்!


பெண்ணே!


உன் பழுத்த கன்னங்களில்
பலகோடி முத்தங்கள்
நான் இட மாட்டேனா?


உன் செழித்த மார்பினில்
நான் பல்லாயிரம்
இரவை கடக்க மாட்டேனா?


உன் கொளுத்த இடையினில்
குடிசை ஒன்று அமைத்து
நான் வசித்திட மாட்டேனா?


உன் உடல் முழுதும்
உறுகி ஓடும்
வியர்வை துளியில்
நான் ஒரு துளியாய்
கலந்திட மாட்டேனா?


அன்பே!


விடியாத இரவு வேண்டும்
விலகாமல் நீயும் நானும்...
ஒரு போர்வையினுள்
புது உலகம் படைக்க...


பிரிவில்லா வாழ்க்கை வேண்டும்!
அளவில்லா அன்பு வேண்டும்!
பாசமுள்ள பசங்க வேண்டும்!
முடி நரைத்த பின்னமும்
என் மார்பில் நீ
உன் முகம் புதைத்து
உறங்க வேண்டும்!
இறுதிவரை என் விரலினுள்
உன் விரல் வேண்டும்!


காலத்திற்கும் "நீ"
காதல் செய்ய "நான்"


வேறென்ன வேணும்????


கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:33 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 10337

மேலே