தரமான தாரத்தாள் - சிந்தடிப் பாடல்

இனிய மணத் தேகத்தாளே
இளகிய இதயம் கொண்டவளே
அமுதச் சொல்லால் அரண்போல்
என்றும் எம்முள் களைப்பகல
தர்மச் சிந்தனை தினம்புகட்டி
தடைகள் களைய திடமாக்கி
அடையும் இலக்கை இலகுவாய்
இரும்பு சிந்தையை உடும்பாக
உலக பாதையில் எளிதாக
ஊடுருவும் வித்தை அளித்தே
கைத்தளம் பற்றிய நாள்முதல்
கண்ணாய் எனையே காத்தாய்.
----- நன்னாடன்.
சிந்தடிப் பாடல்.

எழுதியவர் : நன்னாடன் (9-Sep-20, 8:01 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே