அடையாளம்

அடையாளம்


எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


ஆண்கள் என்றால் நெற்றிக் கங்கா காளன் நீரும் பறைசாற்றும்
பெண்கள் என்றால் நெற்றி வட்டப் பொட்டெங் கெங்கும் நிறைக்கும்பார்
பாண்டி சேர சோழ பண்டைத் தொண்டை கொங்கி லிதைக்காண்பாய்
ஆண்டிப் பெண்ணான் யாரும் சின்னம் காட்டி டுந்த மிழர்பாரே








எழுதியவர் : பழனிராஜன் (12-Sep-20, 11:35 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : adaiyaalam
பார்வை : 156

மேலே