அந்த நாள் ஞாபகம்
செப்டம்பர் பதினாலு
ஏதேதோ ஞாபகம்
பெற்றோரின் பெரியோரினதும்,
அண்ணன்கள் , தம்பிகளினதும்
மிகப் பெரிய ஆரவாரம்
மகிழ்ச்சியின் பேருவகையில்
அகமும் முகமும் மலர்ந்து
மனமுவந்து கொண்டாடிய
திருநாள் இது இந்நாள்
திருமணம் எனும் மணநாள்,
ஒவ்வொருவர் மனமும்
மனம் நிறைந்து
வாழ்த்திய பொன்னாள் இந்நாள் .
இனிய நினைவுகள் மனதினில்
பாசத்தின் பெருமையும், அன்பின் ஊற்றும்
அலைகடல் போல் பொங்கி வழிந்து நின்ற
அந்தநாள் நெஞ்சத்தில் இன்று ,
நினைவில் மகிழ்கிறது
இன்று போல் என்றும் என்றும்
நற்சுகத்துடன்
வாழ வேண்டுமென இறைவனை
நன்றியுடன் வேண்டுகின்றேன்
நன்றி தேவனே நன்றி
god is great