பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு மிரட்டல் கவிஞர் இரா இரவி

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !

மிரட்டல் ! கவிஞர் இரா .இரவி !

பயந்தது போல பம்மி
பாய்வார்கள் பின்பு
மிரட்டல் !

காரியம் சாதிக்க
கருவி அல்ல
மிரட்டல் !

அன்பால் ஆளலாம்
வாம்பால்வீழலாம்
மிரட்டல் !

பயன்படுத்தியவர் மீதே
பாய்ந்து பயப்படுத்தும்
மிரட்டல் !

எதற்கும்
தீர்வல்ல
மிரட்டல் !

மிரட்டியவர்களே
மிரண்டுபோனார்கள்
நாடு நடப்பு !

ஈடுபடுவதில்லை
சுயமரியாதைக்காரனிடம்
மிரட்டல் !

அதிகாரம் வைத்திருப்போரின்
ஆணவ ஆயுதம்
மிரட்டல் !

இன்று பிறரை
நாளை உன்னை
மிரட்டல் !

அடிபணிவதில்லை
அனைவரும்
மிரட்டல் !

கோழையிடம் ஈடுபடும்
வீரனிடம் எடுபடாது
மிரட்டல் !

மனசாட்சியற்றவரின்
மனிதநேயமற்ற செயல்
மிரட்டல் !

இல்லாத பேய்களை
இருப்பதாக திரைப்படங்களில்
மிரட்டல் !

சிலர் பயன்படுத்துவது
பலர் விரும்பாதது
மிரட்டல் !

ஏற்கமாட்டான்
கொள்கையாளன்
மிரட்டல் !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Sep-20, 8:51 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 152

மேலே