முதல் கோணல்
சொன்னா கேளுடி .எனக்கும் வயசு ஆயிடுச்சு .உன்னை ஒருத்தன்கையிலே புடிச்சுக் கொடுத்துட்டா என் கடமை முடிஞ்சி போயிடும்.
அம்மா! சும்மா இருக்க மாட்டே !தினமும் இதே இராமாயணம் தானா?
பின்னே என்ன ? 32 வயசு ஆயிடுச்சு .சினிமா ஆசையிலே சென்னை வந்து சைடு ஆர்டிஸ்டா ஆடிஆடி வயசே முழிங்கிட்டே. உங்க அப்பன் குடிச்சு குடிச்சு உசுர முழிங்கிட்டான்.எனக்கு அப்புறம் உனக்கு யாருடி?
ஏம்மா நான் என்ன சாதாரண பொண்ணுங்க மாதிரியா? என்னை எவன்மா கல்யாணம் பண்ணிக்குவான். அப்படியே எவனாச்சும் பண்ணி கிட்டாலும் என் மனசு எப்படிமா ஏத்துக்கும்.
அதுக்கு என்ன பண்றது ?உனக்குன்னு ஒருத்தன் பொறந்திருக்க மாட்டானா?.
பொறந்து வந்தவனெல்லாம் என்னை தொட்டுட்டான். இனி என்ன கல்யாணம் வேண்டி இருக்கு?
அதுக்கு என்ன பண்றது? நடிப்புல எத்தனையோ தடவ எத்தனையோ தாலியை எவன்எவனோ கட்றது இல்லையா ?அது மாதிரி தாண்டி இதுவும்.
என்னம்மா பேசுற நீ ?நல்ல குடும்பத்துல இதுவரைக்கும் ஒழுக்கமா இருக்கிற நீயா? இப்படி பேசுற.
குப்பென்று அழுகை வந்தது .என்னடி பண்றது? உனக்குன்னு ஒரு ஆதரவு வேணாமா ?இன்னும் வயசு ஆகிகிட்டே போகுதே ?என்னடி பண்றது?
அம்மா இப்ப நீ சொல்றதும் ஒத்துவராதும்மா . நாம என்ன வெளிநாட்டு கலாச்சாரத்திலேயா பொறந்து இருக்கோம். ஏம்மா கர்ப்புங்கிறது கர்ப்பப்பை இல்லைம்மா.இது அழிப்போற உடம்புன்னு வேதாந்தம் பேசறதுக்கு .மனசு சம்பந்தப்பட்டது.
மகளையே பார்த்துக்கொண்டிருந்தாள் வேதனைப்பட்ட தாய்.
என்னம்மா பாக்குற? இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் ஒழுக்கம் என்கிறகற்போடுவாழத்தான்ஆசைப்படுறாங்கம்மா. ஆனால் சூழ்நிலை சமுதாயம் ஏற்படுத்தும் சிக்கல் தவிர்க்க முடியாத ஆசை அறிவிழந்த நிலையில என்ன மாதிரி வழிதவறிய பல பெண்கள் வேதனையோடு அப்படியே காலத்தை ஓட்ட த்தான் மனம் விரும்புமே தவிர ஒரு குடும்ப பொண்ணாக வாழமுடியாதும்மா
. தப்புமா. காலம் மாறிகிட்டு இருக்கு .உனக்குன்னு ஒருத்தன் நிச்சயம் இருப்பான். சொல்றதை கேளுடா கண்ணா . மகளின் கன்னத்தை தடவி கெஞ்சினாள் தாய்.
அம்மா நீ தேடினால் நிச்சயம் எத்தனையோ பேர் சரின்னு சொல்லுவாங்கன்னு வச்சுக்கலாம் .ஆனா என்னால ஒரு குடும்ப பொண்ணோட மனநிலையிலே ஒரு குழந்தை பெத்துக்க முடியுமா? சொல்லு
பெத்துகிட்டாதான் என் மனசு சந்தோஷப் பட்டு கொஞ்சுமா ? அம்மா முதல் கோணல் முற்றும் கோணல் தான். தயவு செஞ்சு என்னை இப்படியே விட்டுடு .வெடுக்கென எழுந்து போனாள் சைடு ஆர்டிஸ்ட் தில்லானா மஞ்சு.