மர்மம்😎
மர்மம்😎
மானுட வாழ்க்கை பயணத்தில்
மர்ம முடிச்சுகள் பல
மாயமான மனிதர்கள் எங்கே
மரங்கொத்திப் பறவை தின்றுவிட்டதா
மாயலோகம் சென்றனரோ
மந்திர நாற்காலியில் அமர
மலையிலிருந்து உருட்டினாரோ
மந்திரக்காரனைக் கேட்டால்
மரிக்கவில்லை மரிக்கொழுந்து
பூக்கவில்லை
கதை அளக்கிறான்
வரலாறு வாய் பிளக்கிறது
முழு சோற்றில் பூசனியை மறைக்கிறது
செம்மறி ஆடுகள் தலை அசைக்கிறது
செங்கோல் பிடிக்க
தலைமை எல்லாம் தரங்கெட்டுப் போனது
ஆட்டி வைத்த பேராசை பிசாசு
பஞ்சமாபாதகம் செய்தது
அதிகாரம், ஆட்சி
போட்டியாளனைக் காவு வாங்கியது
தலைவர்கள் எல்லாம் தலைவன் இல்லை
பிறந்த குணம் மாறாத அற்ப பதர்
ஞானத்தோடு யோசி
நியாயம் தெரியும்
மனிதன் மனம் முழுக்க சாக்கடை என்று
- பாலு
( கமலஹாசன் மாதிரி.. ஒரு சின்ன முயற்சி)
( புரியவில்லை என்றால் திட்டிவிடும்...என்னை..)