திரைப்பட பாடல் மெட்டுடன்

ஆண்.: ஏண்டி புள்ள உன்னப் பார்த்தா
மஞ்சள் பூவும் மயங்குதடி
நெஞ்சுக்குள்ள நீலக்கடல்
அலையும் அதிகமாய் அடிக்குதடி

பெண்: தென்றல் தீண்டும் போது எல்லாம்
மாமா நினைப்பு தோணுதய்யா
அணைத்து இறுக்கி ஆசையோடே
கொஞ்ச நீயும் வேணுமைய்யா

ஆண்.:பவழமல்லி சூட்டிக் கொண்டு
பஞ்சு மனசை எரிக்கிறயே
கொஞ்சும் போது நஞ்சு பாம்பாய்
கோள விழியால் முறைக்கிறயே

பெண்:பந்தம் பூரா இருக்கும் போது
அங்க சீண்டலை செய்கிறயே
பகலும் போயி இரவும் ஆனா
பாலைக் குடிக்க வாயேன் மச்சான்

ஆண்.: அவுளை நினைச்சு உரலைச் சுரண்டும்
வேலய இதுவரை செய்ததில்ல
ஆன உன்ன பார்த்த பிறகு
உலக்க உறுதி மனசுக்குள்ள

பெண்: நானும் இங்கு தேனா இருக்கேன்
திணவோடே வாங்க மச்சான்
திணையும் தேனும் ஒன்னா சேர்ந்தா
தித்திப்பாக பசியடங்கும்.
-------- நன்னாடன்.

(ஆத்து மேட்டு தோப்புக்குள்ள …. திரைப்பட பாடல் மெட்டுடன் பொருத்தமான வரிகள்.)

எழுதியவர் : நன்னாடன் (24-Sep-20, 6:43 pm)
பார்வை : 64

மேலே