கிளித்தூது

நேற்றுதன் விழிப் பார்வையால் என்மனதை
பற்றி கொண்டதுபோல் தன்புன் முறுவலால்
சொல்லி மறைந்தவள் இன்று நான்
காத்து கிடந்தும் வாராததேனோ தெரியலையே
மீண்டும் அவள் பார்வைக் காக
ஏங்குதே என்மனம் கிளியே நீபோய்
என்மனதை அவளிடம் இதைக் கொஞ்சம்
சொல்லி எனைப்பார்க்க பரிந்துரைப் பாயோ
நீ வந்து செய்தி கூறும் வரை
உனக்காக காத்திருப்பேன் நானே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Sep-20, 5:35 pm)
பார்வை : 91

மேலே