ஒரு புதிய புத்தகமாய்

மூடிய புத்தகத்தைத் திறந்தேன்
வள்ளுவனோ கம்பனோ ஷெல்லியோ
பார்க்கவில்லை
முறுவலிக்கும் இதழ்களும்
மூடித்திறக்கும் இமைகளும்
கலைந்தாடும் கருங்கூந்தல் அழகினில்
என் முன் வந்தமர்ந்தாய் ஒரு புதிய புத்தகமாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-20, 10:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

மேலே