பவி - தவி

ஏன்டா அமெரிக்கா பேரா எப்படா வந்தீங்க?
@@@@@
நேத்துத்தான் பெரிய பாட்டிம்மா.
@@@@@@
சரி. மொத மகப்பேறுலேயே உன் மனைவி சுப்புரியா ரண்டு பெண் கொழந்தைங்களப் பெத்ததா எந் தங்கச்சி சொன்னா.அதுங்களுக்குப் பேரு வச்சிட்டீங்களா?
@@@@@@
உம். நம்ம தமிழர் வழக்கப்படி இந்திப் பேருங்கள வச்சிருக்கிறோம்.
@@@@
பேருங்களச் சொல்லுடா குமாரு.
@@@@@@@
ஒரு பொண்ணுப் பேரு 'பவி' (Bhavi = emotional). இன்னொரு பொண்ணுப் பேரு 'தவி' (Dhavi = honey, creeper with beautiful flowers, spring time).
@@@@@@@
என்ன பேருங்கடா இது 'பவி, 'தவி'.
'பவி' யாரையாவது சீண்டி கோவம் வந்தா 'பவி'ய அடிப்'பாவி'ன்னு சொல்லப் போறாங்க. இன்னொருத்தி காலம் பூரா தவிக்கச் சொல்லியா அவுளுக்கு 'தவி'ன்னு பேரு வச்ச?
@@@@@@@
ரண்டு இந்திப் பேருங்களுக்கும் அழகான அர்த்தம் இருக்குது..இப்பெல்லாம் இந்திப் பேரை பிளாளைங்களுக்கு வைக்கிறவங்களைத்தான் தமிழர்கள்னு நம்ம தமிழர்கள் மதிக்கிறாங்க..தமிழ்ப் பேரை வச்சா.தமிழர்களே நம்மள மதிக்கிறதில்ல பெரிய பாட்டிம்மா.
@@@@@@
நீ சொல்லறதும் சரிதான்டா குமாரு. காலம் கெட்டுப் போச்சுடா.
■■■■■■■■■■■■■■■■■■■◆◆
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (1-Oct-20, 10:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 56

மேலே