வானவில் காதல்

செல்லாப் பணமெடுத்து சேமித்து வைப்பதுவும்
சொல்லாதக் காதல் சுகமென்று சொல்வதுவும்
வில்லாய் வளைந்து விழிஈர்க்கும் வானவில்லாய்
இல்லாம லாதல் இயல்பு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Oct-20, 1:59 am)
Tanglish : vaanavil kaadhal
பார்வை : 304

மேலே