என் இனியவள்

என் இனியவளே....!
உனை நான் வர்ணிக்க தகுதி உண்டா...?

தெரியவில்லை, இருந்தும் முயற்சிக்கிறேன்......

தேவனே கண்டு வியந்த அந்த தேவதை நீ...!

கழுத்தில் ஆரங்களும் கையில் அழைபேசியாமான
அந்த அழகை கண்டு அரசன்கூட அடிவழுக்குவான்....!😻

நான் மட்டுமென்ன நயமாறாத நாயகனா...?

சுருண்டு சுருண்டு இருக்கும் அந்த மேகங்கள் கூட
உந்தன் சுருண்ட அந்த கூந்தலுக்கு இணையாகுமா...?😍

நாவிலே பாவில்லாமல் பாடும் அந்த பஞ்சவர்ணகிளி கூட...,
உந்தன் பட்டாடையை கண்டு பரவசத்தை இழந்தது...!😀

சான்றோன் செந்தமிழை வல்லின மெல்லின இடையினமாய் பிரித்தான்....,
ஆனால் அந்த ப்ரம்மன் மெல்லிடையாய் உன்னை படைத்தான்...!😻

பூக்காத அந்த குறிஞ்சிப்பூ கூட உந்தன் மேனி கண்டு பூத்திடும் போல...!😋
இந்த பூமேனியை படைக்க பூமகன் பூக்களின் மேலே படையெடுத்திருப்பான்...!

பால் வண்ணம் மாறாத அந்த பாவையை கண்டு
பாலற்ற குழந்தையாய் நான் பா-வை பாடுகிறேன்...!

அந்த பாவையின் பால் மனம் தான் இறங்கிடுமா...?
பாரம் பார்க்காமல் பா-வை பாடும் பாதகன்
-பெ.தேவராஜ்.BA...,
( நெசவாளன் )

எழுதியவர் : பெ.தேவராஜ் (2-Oct-20, 9:37 pm)
Tanglish : en inaiyaval
பார்வை : 498

மேலே