காதல்

முழு நிலவுதான் அழகென்று நினைத்திருந்த நான்
வழக்கத்துக்கு மாறாய் இன்று மூன்றாம் பிறையைப்
பார்த்தேன் முழு நிலவில் இல்லா அழகை
பிறையில் இருப்பதை முதல் முறையாய்க் கண்டேன்
ஆம் பிறை நிலவில் முழுநிலவின் களங்கம்
ஏதுமே இல்லை பிறை நிலவில் முழு அழகு ....

புரிந்தது ..... பெண்ணே நான் கிட்ட
நெருங்கும்போதெல்லாம் நீ தூர தூர போய்
எழில்பொங்கும் உன் அங்கங்களை முழுவதும்
தெரியாமல் இருக்க மறைத்துவைத்தாய்
தெரிந்தும் தெரியாதது போல் கண்டேனே
உன் அழகை ரசித்தேன் இப்போது
அந்த மூன்றாம் பிறை போல
அவள் சொன்னதும் பளிச்சென்று வந்தது
மனதின் முன்னே.....
' விருந்து கேட்பதென்ன அதிலும் விரைந்து
மன்னவா கொஞ்சம் பொறுத்திரு.... நாளை
மனம் முடித்து உன்னவளென்று நான்
ஆனபின் என்னை நீ காணலாமே
தேயா உன் பூரண நிலவாய் தினம் தினம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Oct-20, 8:48 pm)
Tanglish : kaadhal
பார்வை : 230

மேலே