மனவலிமை

“ நிலம் ” தன் வலிமையை காட்ட,
மண்ணில் புதைந்து கிடந்த விதை, மரமாக உருவெடுத்தது.
மரம் தன் வலிமையை காட்ட,
வேர் ஊன்றி எழுந்து நின்றது.

“ நீர் ” தன் வலிமையை காட்ட,
கல், முள், மலை, என்று பாராமல் உருண்டு ஓடி ,
கடலாக உருவெடுத்தது.
கடல் தன் வலிமையை காட்ட
அலைகளாக சீறி எழுந்து, சூறாவளியை விழுங்கியது.

“ காற்று ” தன் வலிமையை காட்ட,
ஆண்டுக்கு ஒரு முறை, சூறாவளியாக உருவெடுத்தது.
சூறாவளி தன் வலிமையை காட்ட,
சுற்றி இருப்பவற்றை சூறையாடி அச்சுறுத்தியது.


“ நெருப்பு ” தன் வலிமையை காட்ட,
காட்டுத் தீயாக உருவெடுத்தது.
காட்டுத் தீ தன் வலிமையை காட்ட,
காட்டை அழித்து, புகை மண்டலத்தை உருவாக்கியது.

“ ஆகாயம் ” தன் வலிமையை காட்ட,
மேகங்களை கூட்டி, மழையாக உருவெடுத்தது .
மழை தன் வலிமையை காட்ட,
குளமாகவும், குட்டையாகவும், ஆறாகவும், கடலாகவும் உருவெடுத்தது.

“ குழந்தை ” தன் வலிமையை காட்ட,
இரண்டு அடியில் எட்டு வைத்து, எழுந்து நின்றது!!!!!.
மனிதன் தன் வலிமையை காட்ட,
ஆறு அடியில் எழுந்து நின்று, இயற்கையின் சீற்றத்தை
மன வலிமையோடு எதிர்த்து நின்றான்......!!!!!

எழுதியவர் : வாழ்கை (20-Oct-20, 11:29 am)
Tanglish : manavalimai
பார்வை : 596

மேலே