நிலையான கல்வி

நிலையில்லா இடத்தில்
நிலையான கல்வி
உடைந்த பலகையில்
உடையாத எழுத்துக்கள்
வலிகளோடு
வரிகளை படிக்கிறார்கள்
வழிகள் பிறக்குமென்று
விழிகளால் சிரிக்கிறார்கள்

வெட்ட வெயிலில்
பட்டப்படிப்பு
ஏழ்மை தீயில்
எரியும் நெருப்பு
கல்வியொன்றே தகுதி
உயர்த்தும்
இருளை போக்கி
வெளிச்சம் தெளிக்கும்

கூரையில்லா பள்ளி
கூடம்
கூர்மை அறிவு புகுட்டும்
கல்வி கூடம்
விரல் தொடுத்து
படிக்கிறார்கள்
நாளை விரல் நீட்டி
பேசுவதற்கு

உணவில்லாமல் இருக்கலாம்
கல்வி இல்லாமல் இரு(ற)க்காதே...

எழுதியவர் : (20-Oct-20, 11:19 am)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : nilayana kalvi
பார்வை : 53

மேலே