போட்டிக்கவிதை

போட்டிக்கவிதை

உழவர் உழைப்பும் காதலும்
வெண்பா
ஆழிமங்குல் கூடிப் பிடுகுடன் மாரியும்
வாழிப் பழனமெனப் பெய்தது -- பூழியோட்ட
மேழிதூக்கி புஞ்சையுழ மேய்ச்சல்நல் மாடுடன்
நாழியுண்டுப் போனருழவர்
உழவர் வாழ்க்கை
வெண்பா
கல்லாங்குத் தையும் மதுகை யுடனுழுது;
பொல்லாமா தொவ்வல்நீக் கிக்காத்தார் -- நல்மணி
தக்கதாய் வாணிப நூழி லரளந்து
ஒக்கல் மகிழவுண் டார்
காதல் மணம்
வெண்பா
ஓவமொக்கும் மங்கையிவ லில்லில் வறுவிலி
நாவலிழிஞ் சன்முகரி மைகண்டாள் -- காவல்
தடுத்தும் புடையலிட்டு மங்கை மணக்க
அடுக்குமா பாரென்ற தூர்


ஆதித்தன் வெம்மையால் கடல்நீர் ஆவியாகி ஆங்காங்கே கரு மேகங்களாகிப் பின்
ஒன்று சேர்ந்து இடியுடன் மழை வயல்களின் பயிர் செழிக்கப் பெய்த்தது. உழவர்கள்
மகிழ்ந்து ஏர்கலப்பையை தூக்கிக் கொண்டு புழுதி மண்ணை உழலாம் என்று
நாழியளவு வயிற்றுக்கு சாப்பிட்டுவிட்டுப் மேய்துகொண்டிருந்த மாடுகளை ஒட்டிக்கொண்டு
புறப்பட்டனர்..
கல்லும் பாறைகளும் நிறைந்த புஞ்சை நிலத்தை மிகுந்த கஷ்டத்துடன் போராடி யுழுது
துன்பம் கொள்ளாமல் மிருகங்களின் அழிவிலிருந்து பாதுகாத்து பயிரை அறுவடை செய்து
வணிகர்களுக்கு விற்று தங்கள் உறவினர்களுடன் கொடுத்து உண்டு மகிழ்ந்தார்கள்.


இப்படிப்பட்ட ஊரில் அழகிய ஓவியம் போன்ற மங்கை யொருத்தி அனாதையான
வறுமையால் தாழ்ந்த இழிந்த ஒருவன் கல்விக் கேள்விகளில் தலைசிறந்த
ஒருவனை காதலித்து யார்சொல்லும் கேளாது மாலையிட்டு மணந்து கொண்டாள். இது
அடுக்குமா என்று ஊர் மக்கள் முனகுகிறார்கள்





ஆழி(மங்குல்) கூடிப் (பிடுகு)டன் மாரியும்
வாழிப் (பழன)மெனப் பெய்தது -- பூழியோட்ட
மேழிதூக்கி புஞ்சையுழ மேய்ச்சல்நல் மாடுடன்
நாழியுண்டுப் போனருழ வர்


கல்லாங்குத் தையும் (மதுகை )யுடனுழுது;
பொல்லாமா (தொவ்வல்)நீக் கிக்காத்தார் -- நல்மணி
தக்கதாய் வாணிப (நூழி லர)ளந்து
(ஒக்கல்) மகிழவுண் டார்



(ஓவமொக்கும்) மங்கையிவ லில்லில் (வறுவிலி)
நாவ(லிழிஞ் சன்)(முகரி மை)கண்டாள் -- காவல்
தடுத்தும் (புடைய)லிட்டு மங்கை மணக்க
அடுக்குமா பாரென்ற தூர்

எழுதியவர் : பழனிராஜன் (20-Oct-20, 8:49 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 69

மேலே