இக்கால கல்வி
📚இக்கால கல்வி📚
💐💐💐💐💐💐💐💐
அம்பேத்கர் விரித்த கோணிப்பாய். அப்படியே இன்றும் கோரைப்பாயாய்
பேதங்கள் ஆயிரம் கல்வியில் பெயரளவில் மட்டுமே சமச்சீராம்.
அஞ்சு வயது துள்ளித் திரிந்து
அப்புறம் திறந்த பள்ளிக் கதவு --
இன்று
பரந்த மனதாய் பெற்றோர்கள் பிறந்த ஈரம் காய்வதற்குள்
பிஞ்சுக் குழந்தையை பிடித்துச் செல்ல
மஞ்சள் வாகன ஏற்பாடு
ஏழைக் குழந்தையும் இதில் படிக்க அரசுச் செலவில் ஒதுக்கீடு.
கத்தை பணத்தை செலவழித்து கெத்தை காட்ட ஒரு பள்ளி.
ஒத்தை பணமும் செலவின்றி ஓசியில் படிக்க சில பள்ளி.
அத்தனை பேரும் மருத்துவம் படிக்கனும்
அது கிடைக்கா விட்டால் உயிரைத் துறக்கனும்.
அரசியலாரின் நல் விளையாட்டு நிவாரணம் பெயரிலொரு பணக்கட்டு.
நீட்டுத் தேர்வில் நீந்திச் சென்று போட்டி போட்டு மருத்துவர் வந்தும்.
பிணத்துக்குப் போடும் வாய்க்கட்டு --இன்று.
சனத்துக்கு போட்டது
நோய்த்தொற்று
இஞ்சியும் பூண்டும் வைத்தியம் என்றால்.
படித்த மருத்துவம் பைத்தியமா.?
இது கற்றலில் குறையா ? கல்வியில் குறையா ?
வாழ்க்கையில் தவறா ? வாழ்வதே தவறா ?
க.செல்வராசு