வெள்ளிக் கொலுசில்

தெள்ளிய நீரோடை தெம்மாங்கு பாடுது
துள்ளிடும் மீன்கள் இவள்விழியை ரசிக்குது
அள்ளிப் பருகிட கைகுவித்துக் குனிந்தபோது
வெள்ளிக் கொலுசில் இவள்நிற்பது தெரிந்தது !

க.வி

எழுதியவர் : கவின் சாரலன் (26-Oct-20, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : vellik kolusil
பார்வை : 82

மேலே